ஆரிக்கு வில்லனாகும் மலையாள நடிகர்!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (17:47 IST)
ஆரி நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் சரத் ஒப்பந்தமாகியுள்ளார்.

உலக தமிழர்களை தன்வசபடுத்தி தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி மக்கள் மனதில் இடம் பெற்ற  பிக்பாஸ் வின்னர் ஆரி அர்ஜுனனின் புதிய படத்தை இயக்குகின்றார் அறிமுக இயக்குனர் அபின். இந்த படத்தில் முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் ஆரி. 

ஷவுரியா புரொடக்ஷன்ஸ் -சுப்பையா மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும்  இப்படத்தை அறிமுக இயக்குனர் அபின்இயக்குகிறார்.  ஆரிக்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை வித்யா பிரதிப் கதாநாயகியாக நடிக்கிறார். இன்வெஸ்ட்டிகேசன்  க்ரைம், கமர்சியல் த்ரில்லராக உருவாகி வரும் இப்படம் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்க விரைவில் வருகின்றது. 

இந்த படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகரான ஷரத் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் அங்கமாலி டைரிஸ் உள்ளிட்ட மலையாள படங்களிலும் தமிழில் செக்க சிவந்த வானம், சண்டக்கோழி 2 மற்றும் ஆட்டோ சங்கர் வெப் சீரிஸிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்