நீண்டகாலமாக இழுத்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதி படம் – விரைவில் சிங்கிள் பாடல் ரிலீஸ்!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (17:37 IST)
விஜய் சேதுபதியின் மாமனிதன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் விரைவில் ஆகும் என இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

சீனுராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து மாமனிதன் படம் உருவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே முடிந்தது. ஆனால் இன்னமும் ரிலிஸ் ஆகாமல் உள்ளது. இந்த படத்தைத் தயாரித்துள்ள யுவன் ஷங்கர் ராஜா இப்போது ரிலிஸுக்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளனர்.

இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆன நிலையில் இன்னும் ரிலீஸாகமலேயே இருந்தது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலை வெளியிட உள்ளதாக இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்