மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்த மகிழ் திருமேனி… மீண்டும் அரசியல் களத்தில் உதயநிதி!

வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (10:45 IST)
நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சட்டசபை தேர்தல் மற்றும் கொரோனா ஊரடங்கால் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அதையடுத்து இப்போது நிலைமை சரியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பை நடத்தினார் மகிழ் திருமேனி.

ஆனால் இப்போது மொத்த படப்பிடிப்புமே முடிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் அரசியல் களத்துக்கு திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்