விஜய்யின்' பீஸ்ட் 'எப்போது ரிலீஸ்?

புதன், 4 ஆகஸ்ட் 2021 (22:58 IST)
நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகிறது.

 
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார். இந்த படத்தின்3 ஆம் கட்டப்படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

 
இந்நிலையில், பீஸ்ட் பட ஷூட்டிங்கில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இணைந்துள்ளார். இப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்
.
தற்போது இப்படம் குறிதது ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதில், அடுத்த ஆண்டு ( 2022) கோடை காலத்தில்( ஏப்ரல்_ மே) இப்படம் வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகிறது. வேகமாகப் படப்பிடிப்புகள் முடிந்தாலும், அடுத்து, போஸ்ட் புரொடெக்சன் இசைக் கோர்ப்பு பணிகள் முடிவடைய இன்னும் 3 மாதம் காலமாகும் என்பதால் இப்படத்தை அடுத்தாண்டு கோடை விடுமுறையில்  வெளியிட படக்குழு திட்டமிடுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

#Beast - Summer 2022 Release? @BeastFiIm @actorvijay #Beast pic.twitter.com/X9FXGyI2po

— Vijay FC (@TheVijayFC) August 4, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்