அடுத்த கட்ட படப்பிடிப்பு… ரஷ்யாவுக்கு செல்லும் பீஸ்ட் படக்குழு!

வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (09:51 IST)
விஜய்யின் பீஸ்ட் படக்குழு அடுத்ததாக ரஷ்யாவுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்த இயக்குனர் நெல்சன் திட்டமிட்டுள்ளாராம். ஏற்கனவே அஜித்தின் வலிமை குழுவும் ரஷ்யாவுக்கு செல்ல உள்ள நிலையில் இப்போது பீஸ்ட் படக்குழுவும் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்