பாபி சிம்ஹா மீது கோபத்தில் இருக்கும் மதுபாலா

Webdunia
புதன், 3 ஏப்ரல் 2019 (10:19 IST)
ரோஜா படம் மூலம் 1990 களில் பிரபலமானவர் நடிகை மதுபாலா. இவர் நீண்ட இடைவெளிக்கு பின்பு பாபி சிம்ஹா நடித்த அக்னி தேவி படத்தில்  வில்லியாக நடித்திருந்தார்.
 
இந்த படத்தை தடை செய்யும்படி பாபிசிம்ஹா நீதிமன்றத்திற்கு சென்றார் நீதிமன்றத்திற்கு சென்றார் பாபிசிம்ஹா நீதிமன்றத்திற்கு சென்றார்.  முதலில் படக்குழுவினர் இந்த படத்திற்கு அக்னி தேவ்.என்று தலைப்பு வைத்திருந்தனர். பின்னர் அக்னி தேவி என்று மாற்றி திரைக்கு படத்தை கொண்டு வந்து  விட்டனர்.
 
இதனிடையே பாபி சிம்ஹா தொடர்ந்த தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து போலீசிலும் புகார் செய்துள்ளது.
 
இந்த படத்தின் சர்ச்சை குறித்து மதுபாலா கூறுகையில், நான் அக்னி தேவி படம் சம்பந்தமாக நடக்கும் பிரச்சனைகளை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஒரு நல்ல படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டு இருப்பது வருத்தமாக உள்ளது. இயக்குனர்கள் ஜான் மற்றும் சூர்யாவுக்காக வருந்துகிறேன். எனது சினிமா வாழ்க்கையில் நான் நடித்ததில் சிறந்த படம் இதுதான் .சிறந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்து இருந்தார்கள். இதைப் பெரிய ஆசீர்வாதமாக கருதுகிறேன் . இந்த படத்தின் இயக்குனர்கள் தான் சூரிய ஆகியோருக்கு ஆதரவாக இருப்பேன் இவ்வாறு மதுபாலா கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்