குடிபோதையில் தகராறு செய்த நடிகர் பாபி சிம்ஹா

திங்கள், 16 ஜூலை 2018 (11:13 IST)
சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடிகர் பாபி சிம்ஹா குடிபோதையில் தகராறு செய்ததாகவும் அவர் மீது புகார் எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவில் சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் பாபி சிம்ஹா. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன், கார்த்தி  சுப்பராஜ் இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் நேற்று தனது நண்பர் கருணா என்பவருடன் சென்னை கிண்டி ஈக்காட்டு தாங்கலில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு நண்பருடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. போதை அதிகமாகி பாரில் இருந்த மற்றவர்களை கண்டபடி பேசியுள்ளார்.
 
இதனை தொடர்ந்து பாபிசிம்ஹாவிற்கும் அவரது நண்பருக்கும் இடையே கொடுக்கல், வாங்கல் தொடர்பான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதனையடுத்து விடுதி பாதுகாப்பு ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், தகராறில் ஈடுபட்ட பாபி சிம்ஹா மற்றும் கருணாவை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்