மாநாடு படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தொடக்கம்!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (15:30 IST)
சிம்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களில் எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.

இன்னும் ஒரு முக்கியமான காட்சியாக் படத்தில் இடம்பெறும் மாநாடு காட்சி ஒன்று படமாக்கப்பட உள்ளது. இதற்காக மாநாடு செட் அமைக்கும் பணிகளை இப்போது படக்குழு தொடங்கியுள்ள நிலையில் அது சம்மந்தமான வீடியோவை  வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்