பிக்பாஸ் சீசன் 5, கமலுக்கு பதில் இந்த நடிகரா?

வியாழன், 18 மார்ச் 2021 (08:26 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 4 சீசன்களாக மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் வரும் ஜூன் மாதம் ஐந்தாம் சீசன் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன 
 
இந்த நிலையில் கடந்த நான்கு சீசன்களையும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய நிலையில் ஐந்தாவது சீசனை அவர் தொகுத்து வழங்குவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தற்போது அரசியலில் பிஸியாக இருக்கும் கமல்ஹாசன் தேர்தல் முடிந்தவுடன் விக்ரம் படத்தில் நடிக்க சென்று விடுவார் என்பதால் அவர் ஒருவேளை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மறுத்தால் வேறு ஒரு நடிகரை ஏற்பாடு செய்ய விஜய் டிவி தயாராகி வருகிறது 
 
தற்போது வந்த தகவலின்படி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நான்காவது சீசனையே அவர் தொகுத்து வழங்குவதுதான் இருந்தது என்பதும் அதன் பின்னர் கமல்ஹாசன் ஒப்புக்கொண்டதை அடுத்து அவரே தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்