மாநாடு படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்… சுரேஷ் காமாட்சி வெளியிட்ட அப்டேட்!

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (17:26 IST)
மாநாடு திரைப்படத்தின் தமிழக திரையரங்க விநியோக உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. முஸ்லீம் கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ள இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ் லுக், டீசர் போன்றவை முன்னதாக வெளியாகி வைரலாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்தை எதிர்வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தின் வியாபாரப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில் தமிழக திரைப்பட விநியோக உரிமையை எஸ் எஸ் ஐ ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சுப்பையா சண்முகம் வாங்கியுள்ளார். இதை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்