ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு! 7 பேர் பலி

வெள்ளி, 15 அக்டோபர் 2021 (16:05 IST)
ஆப்கானிஸ்தான் உள்ள மசூதியில் இன்று குண்டு வெடித்து  7 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சமீபத்தில் ஆப்கானிஸ்னில் இருந்து அமெரிக்க படைகள் விலகிய நிலையில், அங்கு தாலிபன்களின் ஆட்சி அமைந்தது.

இதனால் அங்கு எப்போது என்ன நடக்கும் என்ற பதற்றம் நீடித்தது. இந்நிலையில், இன்று ஆப்கானிஸ்தானில் கந்தகாரில் உள்ள  மசூதியில் குண்டுவெடித்தது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

சமீபத்தில், குந்தூஸ் என்ற நகரில் உள்ள மசூதியில் குண்டு வெடித்தது. இதில், வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்த சுமார் 10 பேர் பலியானதாகவும், 90 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்