உண்மையை உரக்க சொன்னால் மாற்றம் வரும்! – சூர்யா ட்வீட்!

வெள்ளி, 15 அக்டோபர் 2021 (15:32 IST)
சூர்யா நடித்து வெளியாகவுள்ள ஜெய் பீம் பட டீசர் வெளியாகியுள்ள நிலையில் அதுகுறித்து சூர்யா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ள நிலையில் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த படம் முழுவதுமாய் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் முன்னதாகவே அமேசான் ப்ரைம் ஓடிடிக்கு விற்கப்பட்டது.

இதனால் இந்த படம் அமேசானில் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதன் டீசர் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சூர்யா “உண்மையை உரக்க சொன்னால் மட்டுமே உண்மையான மாற்றம் நிகழும். மகிழ்விப்பதை காட்டிலும் உணர்வுபூர்வமாய் உண்மையின் பக்கம் நின்ற மனநிறைவை தரும் ஜெய்பீம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்