விஜய், அஜித் படம் அளவுக்கு பிரமாண்டமாய் செலவு செய்த ''லெஜண்ட்'' சரவணா!

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (21:16 IST)
லெஜண்ட் சரவணன் நடித்துள்ள லெஜண்ட் படத்திற்கு விஜய், அஜித் பட அளவிற்கு பல கோடிகள் செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சரவணா ஸ்டோர்  நிறுவன தலைவர்  சரவணன் மற்றும் ஊர்வசி ரெளட்டாலா நடிப்பில் உருவான திரைப்படம் தி லெஜன்ட். ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.

பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தை பிரபல தயாரிப்பாளரும் பைனான்சியருமான அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றி ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் படம் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும்  நிலையில், இப்படத்திற்கு சென்சார் குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

அதிரடி ஆக்சன் படமான இப்படம் 2 மணி நேரம் 41 நிமிடங்கள் ரன்னிங் டைம் என்றும், தமிழகத்தில் 650 தியேட்டர்களிலும், உலகம் முழுவதும் 2500 தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது.

மேலும், அதிகாலை 4 மணி காட்சியில் படம் வெளியாக உள்ளது. இந்த  நிலையில், இப்படத்திற்கு அஜிட், விஜய் படத்திற்கு இணையாக சரவணன் அண்ணாச்சி செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, விஜய், அஜித் போன்றோரின் சம்பளம் ரூ.100 மற்றும் சக நடிகர்களின் சம்பளம் போக ரூ.30 கோடி முதல் ரூ.50 கோடி வரை சம்பளம் ஒரு படத்திற்கு செலவு செய்யப்படும். அதேபோல் தற்போது லெஜண்ட் படத்திற்கு ரூ.30 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஆடியோ வெளியீட்டின்போது, பிரபல நடிகைகளுக்கு பல கோடிகள் பணம் கொடுத்து வரவழைகப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்