ரஜினி, கமல், விஜய், அஜித்… செஸ் ஒலிம்பியாட்டிற்கு அழைப்பு!

செவ்வாய், 26 ஜூலை 2022 (15:36 IST)
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க பல முக்கிய பிரபலங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.


உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. ஜூலை 28 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக தமிழ்நாடே கோலாகலமாக தயாராகி வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் தனி பாடல் வெளியிட்ட நிலையில், சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் செஸ் பலகை போல அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் செஸ் ஒலிம்பியாட் தொடங்க உள்ள நிலையில் சென்னை முழுவதும் பல பகுதிகளில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. 

மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க பல முக்கிய பிரபலங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதோடு நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்