இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஆர்யா & அருண் விஜய் கூட்டணி… வெளியான தகவல்!

புதன், 27 ஜூலை 2022 (15:08 IST)
இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘யானை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஹிட்டானது.

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவரான ஹரி இயக்கிய யானை திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 1 ஆம் தேதி ரிலீஸானது. இதுவரை அருண் விஜய்யின் படங்கள் ரிலீஸ் ஆகாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. விக்ரம் திரைப்படத்துக்குப் பிறகு வெளியான திரைப்படங்களில் யானை வெற்றிப்படமாக அமைந்தது.

இந்நிலையில் இப்போது இதே கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக உள்ளது. ஹரி இயக்கத்தில் ஆர்யா மற்றும் அருண் விஜய் ஆகியோர் இணைந்து இந்த புதிய படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளை இயக்குனர் ஹரி தற்போது தொடங்கியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்