கமல்ஹாசனுடன் கைகோர்க்கும் முன்னணி நடிகர்...ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (16:05 IST)
உலகநாயகன் கமலஹாசன் நடிக்கயிருக்கும் 232 வது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. இப்படத்த்இல் பிரபுதேவா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

கமல் ஹாசன் நடிப்பில்  லோகேஷ் கனகாராஜ் இயக்கத்தில்   புதிய படத்தின் டீசர் கமல் பிறந்த நாள் அன்று வெளியானது. இப்படத்தின் பெயர்  ’’விக்ரம்’ ஆகும்.

இந்த படத்தின் கதையை பொள்ளாச்சியில் லோகேஷ் கனகராஜ் எழுதிக் கொண்டு வருவதாகவும் தீபாவளி கழித்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், காதலா காதலா என்ற படத்தில் கமல் மற்றும் பிரபுதேவா இணைந்து மிகப்பெரிய ஹிட் கொடுத்து சில ஆண்டுகளுக்குப் பின் இருவரும் மீண்டும் விக்ரம் என்ற படத்தில் இணையவுள்ளனர்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேசனல் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்