ராதே திரைப்பட ரிலீஸ் எப்போது? பிறந்தநாளில் சல்மான் கான் அறிவிப்பு!

புதன், 30 டிசம்பர் 2020 (10:25 IST)
நடிகர் சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கியுள்ள ராதே திரைப்படம் அடுத்தாண்டு ரம்ஜானுக்கு ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரபுதேவா சல்மான் கூட்டணி பாலிவுட்டின் வெற்றிக் கூட்டணியாக கருதப் படுகிறது. இவர்களின் கூட்டணி நான்காவது முறையாக ராதே திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்த படத்தில் திஷா பட்டாணி, ரந்தீப் கூடா மற்றும் தமிழ் நடிகர் பரத் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கொரிய திரைப்படம் ஒன்றின் ரீமேக் ஆகும்.

இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக இன்னும் ரிலீஸாகவில்லை. இதனால் படம் ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. இதை மறுத்துள்ள சல்மான் கான் ’சூழ்நிலைகள் சரியாக அமைந்தால் அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு இந்த திரைப்படம் வெளியாகும். படத்தின் ரிலீஸை விட படம் பார்ப்பவர்களின் பாதுகாப்பே முக்கியம்’ எனக் கூறியுள்ளார். சல்மான் கான் நேற்று தனது 55 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்