வெளியானது குருதி ஆட்டம் பர்ஸ்ட் லுக் – மிரட்டலான தோற்றத்தில் அதர்வா!

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (10:10 IST)
அதர்வா நடித்து வரும் குருதி ஆட்டம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வா பரதேசி படத்துக்குப் பிறகு கவனம் பெற்ற நடிகராக உருவாகியுள்ளார். தற்போது குருதியாட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 8 தோட்டாக்கள் புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய இந்த படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் எந்த நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமான நிலையில் இப்போது படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. முதுகில் கத்திகள் குத்தப்பட்டு அதர்வா நிற்கும் மிரட்டலான தோற்றம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த படத்தின் டீசர் டிசம்பர் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது.
  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்