அதர்வாவின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக், டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (18:42 IST)
தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வா தற்போது குருதியாட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தை ஸ்ரீ கணேஷ் என்பவர் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய இந்த படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் எந்த நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தில் அதர்வா ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார் என்பதும் இருவரும் முதல் முதலாக இந்த படத்தில் இணைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குருதியாட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் 8ம் தேதியும் டீஸர் டிசம்பர் 11ம் தேதியும் வெளியாகும் என சற்று முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இந்த அறிவிப்பு குறித்த ஒரு போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் என்பதும், இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
kuruthiyattam
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்