பா ரஞ்சித்தின் ‘சார்பேட்டா’ கதை யாருடையது? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (07:22 IST)
பா ரஞ்சித்தின் ‘சார்பேட்டா’ கதை யாருடையது?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் காலா ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித் தற்போது ‘சார்பேட்டா’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் 
 
ஆர்யா குத்து சண்டை வீரராக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் ‘சார்பேட்டா’ படத்தின் கதை ‘அறம்’ இயக்குனரின் கதை என்று கோலிவுட்டில் வதந்தி ஒன்று பரவி வருகிறது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘அறம்’ என்ற படத்தை இயக்கிய கோபி நயினார் என் கதையை தான் பா ரஞ்சித் இயக்கி வருவதாக கூறப்படுகிறது 
 
ஆனால் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் கோபி, ‘சார்பேட்டா’ கதை தன்னுடையது அல்ல என்றும் விளக்கியுள்ளார். மேலும் அவர் ஒரு குத்துச்சண்டை வீரர் குறித்த கதையை தயார் செய்து வைத்திருப்பதாகவும் ஆனால் அதற்கும் ‘சார்பேட்டா’ கதைக்கும் சம்பந்தமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே பா ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தின் கதை இயக்குனர் கோபியின் கதைதான் என்ற குற்றச்சாட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்