பாலிவுட் பட வாய்ப்புகளை மறுத்த கீர்த்தி ஷெட்டி… அவரே சொன்ன காரணம்!

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (16:08 IST)
நடிகை கீர்த்தி ஷெட்டி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக உருவாகி வருகிறார்.

கீர்த்தி ஷெட்டி அறிமுகமான உப்பெண்ணா திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் பெற்றவர் கீர்த்தி ஷெட்டி. அந்த ஒரு படத்திலேயே தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இதையடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

சூர்யாவின் வணங்கான் படத்திலும் அவர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாலிவுட்டில் இருந்து பட வாய்ப்புகள் வந்ததாகவும், ஆனால் அதை மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் “சினிமாவில் வெற்றி தோல்வி எல்லாம் சகஜம். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து சாதிக்க விரும்புகிறேன். ஒவ்வொரு படத்திலும் என் கதாபாத்திரம் பிடித்தால்தான் நடிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்