பிரபல நடிகையை மணக்கிறாரா நடிகர் கௌதம் கார்த்திக்?

சனி, 6 ஆகஸ்ட் 2022 (16:57 IST)
நடிகர் கௌதம் கார்த்திக் தற்பொது சிம்புவோடு பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தின் மூலம் கதாநாயகன் ஆக அறிமுகம் ஆனவர் கௌதம் கார்த்திக். மிகப்பெரிய அறிமுகம் கிடைத்தாலும் தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இந்நிலையில் இப்போது 1947 மற்றும் பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் பிரபல நடிகை ஒருவரோடு காதலில் இருப்பதாகவும், விரைவில் அவரை மணக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இருவரும் இணைந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்து நடித்த படத்தின் போது காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்