ஜி வி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இடிமுழக்கம் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த அந்த படம் ரிலீஸாகவில்லை. இதையடுத்து அவர் புதுமுக நடிகர் ஏகன் நடிக்கும் கோழிப்பன்னை செல்லதுரை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரிகிடா சஹா கதாநாயகியாக நடிக்க யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பாக டி.அருளானந்த், மேத்யூ அருளானந்த் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்துக்கு ரகுநந்தன் இசையமைக்க, வைரமுத்து, பா விஜய் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர். படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 20 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்போது படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மென்மையான கதையாக இருக்கும் என தெரிகிறது. டிரைலர் காட்சிகளை வைத்துப் பார்க்கும்போது முள்ளும் மலரும் பாணியிலான ஒரு உணர்ச்சிப்பூர்வமான படமாக இருக்கும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.