தலைக்கு ’விஸ்வாசம்’… சிவகார்த்திகேயனுக்கு ’ஹீரோ’ – புல்லரித்த தயாரிப்பாளர் !

Webdunia
சனி, 14 டிசம்பர் 2019 (08:43 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படத்தின் தயாரிப்பாளர் இந்த படம் அஜித்தின் விஸ்வாசம் போல அமையும் எனப் பேசியுள்ளார்.

சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன்,அர்ஜுன் மற்றும் பாலிவுட் நடிகர் அபய் தியோல் ஆகியோர் நடிப்பில் உருவான ஹீரோ திரைப்படத்தின் டிரைலர் நேற்று காலை வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தை தயாரித்த கே ஜே ஆர் ராஜேஷ் பேசிய விஷயம் கவனத்தை ஈர்த்துள்ளது.

அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை சிறப்பாக விநியோகித்து அஜித்தின் கேரியரில் மிகப்பரிய வெற்றிப்படமாக மாற்றிக் காட்டினார் என சொல்லப்படுபவர் ராஜேஷ். ஹீரோ படம் பற்றி பேசிய அவர் அஜித்துக்கு விஸ்வாசம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்ததைப் போல சிவகார்த்திகேயனுக்கு ஹீரோ படம் அமையும் எனப் பேசியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்