அடுத்த படத்தை எப்போதுதான் தொடங்குவார் யாஷ்?... அவரே அளித்த பதில்!

Webdunia
வியாழன், 22 ஜூன் 2023 (11:40 IST)
யாஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்டர் 2. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த பாகத்திற்கான முன்னோட்டமும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து மூன்றாம் பாகம் உருவாக்கப் படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில் இன்னும் தனது அடுத்த படத்தை யாஷ் அறிவிக்கவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது. சமீபத்தில் யாஷ் பிறந்தநாளின் போது விரைவில் அடுத்த பட அறிவிப்பு வெளியாகும் என ஒரு அறிக்கை மட்டும் வெளியானது.

இந்நிலையில் யாஷ் பாலிவுட் இயக்குனர் நிலேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ராமாயணம் சம்மந்தப்பட்ட படத்தில் ராவணன் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதாவாக ஆலியா பட்டும் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் இதை இப்போது யாஷ் மறுத்துள்ளார். மேலும் பத்திரிக்கையாளர்களிடம் “வதந்திகளை நம்பாதீர்கள். ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அடுத்த படத்துக்கான திரைக்கதை தயாராக உள்ளது. விரைவில் அறிவிப்பு” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்