பாலிவுட் படத்தில் நடிக்க மறுத்த யாஷ்… இதுதான் காரணமா?

செவ்வாய், 13 ஜூன் 2023 (14:02 IST)
யாஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்டர் 2. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த பாகத்திற்கான முன்னோட்டமும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து மூன்றாம் பாகம் உருவாக்கப் படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேஜிஎஃப்-க்கு பிறகு யாஷ் அடுத்து எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்பது இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. அவரை சந்தித்து பல மொழி இயக்குனர்கள் கதை சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் யாஷ் பாலிவுட் இயக்குனர் நிலேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ராமாயணம் சம்மந்தப்பட்ட படத்தில் ராவணன் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதாவாக ஆலியா பட்டும் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது அந்த படத்தில் யாஷ் நடிக்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, அவர் ராவணனாக நடிக்க ஆர்வமாக இருந்ததாகவும், ஆனால் அதை தன்னுடைய ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்