KGF படத்தில் கலக்கிய நடிகர் திடீர் மரணம்… ரசிகர்கள் அதிர்ச்சி!

Webdunia
சனி, 7 மே 2022 (14:01 IST)
KGF இரண்டு பாகங்களிலும் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற நடிகர் மோகன் ஜுனேலா இன்று உயிரிழந்துள்ளார்.

கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸானது. தென்னிந்தியாவுக்கு நிகராக இந்த படம் வட இந்தியாவில் வசூல் சாதனைப் படைத்தது.

இந்த படத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர்களும் தற்போது இந்தியா முழுவதும் கவனிக்கப்பட்ட நடிகர்களாகியுள்ளனர். இந்த படத்தில் ராக்கியின் கதையை சொல்லும் நபராக சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும் கவனத்தை ஈர்த்த நடிகர் மோகன் ஜுனேஜா இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 54. அவரது மரணத்தை அடுத்து கேஜிஎப் குழுவினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரின் திடீர் மரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்