எஸ்.ஜே.சூர்யாவின் ‘கடமையை செய்’ டிரைலர் ரிலீஸ்

வெள்ளி, 6 மே 2022 (20:00 IST)
எஸ்.ஜே.சூர்யாவின் ‘கடமையை செய்’ டிரைலர் ரிலீஸ்
எஸ் ஜே சூர்யா ஹீரோவாக நடித்த கடமையை செய் என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகியுள்ளது 
 
என்ஜினியரிங் படித்த எஸ்.ஜேசூர்யா தனக்கு தகுதியான வேலை கிடைக்காததால் கிடைத்த வேலையை செய்து வருகிறார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு விபத்து அவருக்கு ஏற்பட அந்த விபத்து அவரது வாழ்க்கையையே மாற்றிவிட்டது அதன் பிறகு என்ன ஆனது என்பதுதான் இந்த படத்தின் கதை என தெரிகிறது 
 
எஸ் எஸ் சூர்யா ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய வேடத்தில் வின்சென்ட் அசோகன் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் 
 
இந்த படத்திற்கு அருண் ராஜ் என்பவர் இசையமைத்துள்ளார். கதை திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் வெங்கட்ராகவன். இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்