மறு ரிலிஸ் தேதி பற்றி ஆலோசிக்கும் கேஜிஎப் படக்குழு!

Webdunia
திங்கள், 24 மே 2021 (09:13 IST)
கேஜிஎப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து ஆலோசனைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2  தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் உற்சாக வரவேற்பைப் பெற்றது.

இந்த படம் ஜூலை மாதம் வெளியாவதாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடுமையான ஊரடங்குக்குப் பின்னும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எதிர்பார்த்த அளவுக்கு குறையவில்லை. அதனால் உடனடியாக இயல்பு நிலை திரும்ப வாய்ப்பில்லை என்பதால் கேஜிஎப் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற படக்குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்