தள்ளிப்போகும் மற்றொரு மெஹா பட்ஜெட் திரைப்படம்! கொரோனாவால் வந்த வினை!

சனி, 1 மே 2021 (08:19 IST)
யாஷ் நடிப்பில் உருவாகி வரும் கேஜிஎப் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2  தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் உற்சாக வரவேற்பைப் பெற்றது.

இந்த படம் ஜூலை மாதம் வெளியாவதாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் இப்போது ரிலீஸ் செய்தால் மிகப்பெரிய அளவில் லாபம் இருக்காது என்பதால் படத்தின் ரிலீஸை தள்ளிவைப்பது சம்மந்தமாக ஆலோசனை நடப்பதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்