கே ஜி எஃப் 2 படத்தின் பணிகள் முடிந்த நிலையில் யஷ் செய்யும் வேலை இதுதான்!

வியாழன், 15 ஏப்ரல் 2021 (17:43 IST)
நடிகர் யாஷ் கே ஜி எஃப் படத்தின் பணிகளை முடித்துவிட்டு பண்ணை வீட்டில் விவசாய வேலைகளை செய்து வருகிறார்.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2  தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் உற்சாக வரவேற்பைப் பெற்றது.

இப்போது அந்த படத்தின் பணிகள் எல்லாவற்றையும் முடித்துள்ள யாஷ் தனது பண்ணை வீட்டில் ரிலாக்ஸாக விவசாய வேலைகளை செய்து வருகிறாராம். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்