சல்யூட் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

Webdunia
திங்கள், 24 மே 2021 (08:59 IST)
துல்கர் சல்மான் நடித்துள்ள சல்யூட் படத்தின் புதிய போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து நடிக்கும் சல்யூட் என்ற திரைப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்த திரைப்படத்தை ரோஷன் ஆண்ட்ரோஸ் இயக்கியிருக்கிறார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் துல்கர் போலீஸாக நடித்துள்ளார். இதோ இந்த படத்தின் டீசருக்கு கிடைத்த கவனத்தை அடுத்து இப்போது அந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை இணையத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. போராட்டக்காரர்களுக்கு மத்தியில் துல்கர் சல்மான் காவல் உடையில் நிற்பது போல இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்