கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த தளத்தில்?

vinoth
புதன், 15 மே 2024 (14:35 IST)
கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படம் கடந்த வாரம்  வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவியது.

கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படம் கடந்த வாரம்  வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் முதல் மூன்று நாட்களில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் கவின் ஒரு ஸ்டார் நடிகராக உருவாகியுள்ளார் .

இந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் ரிலீஸான பின்னர் கலவையான விமர்சனங்கள் வந்ததால் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் படத்துக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் இந்த படம் ஜூன் 14 ஆம் தேதி ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்