தெலுங்கில் கால்பதிக்கும் சூரி… முதல்முறையாக இருமொழிப் படம்!

vinoth

திங்கள், 5 மே 2025 (12:47 IST)
விடுதலை, கருடன், கொட்டுக்காளி மற்றும் விடுதலை 2 என அடுத்தடுத்து வெற்றிப் படங்களாகக் கொடுத்து தன்னை ஒரு கதாநாயகனாக நிலை நிறுத்திக் கொண்டுள்ளார் சூரி.  தற்போது ‘மாமன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இதையடுத்து சூரி விடுதலை படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில் அடுத்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வெற்றிமாறனின் இணை இயக்குனரும், செல்ஃபி படத்தின் இயக்குனருமான மதிமாறன் இயக்குகிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்துக்கு மண்டாடி எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கடலை சுற்றியக் கதைக்களமாக படம் உருவாகி வருகிறது.

இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிப் படமாக உருவாக உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் தெலுங்கில் முதல் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. கடல் பின்னணியில் சூரி கதாபாத்திரம் தன்னுடையக் குழுவினரோடு இருக்கும் போஸ்டர் கவனம் ஈர்க்கும் விதமாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்