வா வாத்தியார்: இழுத்துக் கொண்டே செல்லும் நலன் குமாரசாமி.. அப்செட்டில் கார்த்தி & தயாரிப்பாளர்!

vinoth

புதன், 23 ஏப்ரல் 2025 (11:11 IST)
மெய்யழகன் படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

நீண்டகாலமாக இந்த படம் பற்றி எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. ஆனால் அதன் பிறகு ரிலீஸ் பற்றி எந்த அப்டேட்டும் இல்லை. இந்நிலையில் இந்த படத்துக்காக இன்னும் 20 நாட்கள் ஷூட் நடத்த வேண்டும் என இயக்குனர் நலன் குமாரசாமி அடம்பிடிக்கிறாராம்.

ஏற்கனவே இந்த படத்தின் ஷூட்டிங்கை நூறு நாட்களுக்கு மேல் நடத்தி , கார்த்தி நடித்த படங்களிலேயே அதிக நாட்கள் ஷூட்டிங் நடந்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்போது நலன், மேலும் நாட்கள் கேட்பதால் கார்த்தி மற்றும் தயாரிப்புத் தரப்பு இரண்டு பேருமே அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்