ஓடிடியில் ரிலீஸான ‘டெஸ்ட்’ திரைப்படம் வெற்றியா தோல்வியா?... பிரபலம் பகிர்ந்த தகவல்!

vinoth

புதன், 23 ஏப்ரல் 2025 (11:04 IST)
தமிழ்ப்படம், காவியத்தலைவன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த ஒய்நாட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும்  டெஸ்ட் என்ற படத்தில் சித்தார்த், மீரா ஜாஸ்மின் மற்றும் மாதவன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் கிரிக்கெட் சம்மந்தப்பட்ட கதைக்களம் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சில முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. நேரடியாக ஓடிடியில் ரிலீஸான ‘டெஸ்ட்’ திரைப்படம் எந்த வொரு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் ஒரு தோல்விப் படமாகவே கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ள சினிமாப் பத்திரிக்கையாளர் பிஸ்மி “டெஸ்ட் படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 55 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த படத்தின் மூலம் இதுவரை 5 கோடி ரூபாய் கூட அந்நிறுவனத்துக்கு வருவாயாகக் கிடைக்கவில்லையாம். அப்படி மோசமான தோல்வியை ‘டெஸ்ட்’ படம் சந்தித்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்