நாளை வெளியாகுமா ‘விஸ்வரூபம் 2’ டிரெய்லர்?

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (17:47 IST)
கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.




கமல்ஹாசன் இயக்கி, நடித்த படம் ‘விஸ்வரூபம்’. 2013ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அப்போதே தொடங்கிவிட்டது.
ஆனால், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்னையால் பாதியிலேயே படம் நின்றது. கமலே காசு கொடுத்து படத்தை வாங்கி, மீதமுள்ள வேலைகளைப் பார்த்து வந்தார்.

இந்நிலையில், நாளை கமலுக்குப் பிறந்த நாள். எனவே, ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரெய்லர் நாளை ரிலீஸாகுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்