தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர். கமல்ஹாசன் டுவீட்

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (11:58 IST)
தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர். கமல்ஹாசன் டுவீட்
திமுக தலைவர் கருணாநிதி அவர்களுடன் மிகவும் நெருக்கமான இருந்த நபர்களில் ஒருவர் நடிகர் கமலஹாசன் என்பது அனைவரும் அறிந்ததே. கருணாநிதி அவர்கள் உயிருடன் இருந்தவரை அவருடன் இலக்கியம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கமல்ஹாசன் பேசியவர். அவ்வப்போது கருணாநிதி அவர்களின் இலக்கிய அறிவை கமல் போற்றிப் புகழ்ந்தது தெரிந்ததே
 
இந்த நிலையில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் இரண்டாவது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சென்னையில் உள்ள கருணாநிதியின் சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர் 
 
இந்த நிலையில் தான் மிகவும் மரியாதை வைத்திருக்கும் கருணாநிதியின் நினைவு நாளில் கமலஹாசன் தனது டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: வள்ளுவருக்கு சிலை வடித்தும், வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் தமிழையும், தமிழ் சான்றோரையும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர். தமிழுடனும், தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்