வெறும் 1500 தானா? உடல்தானம் செய்த கமல் ஆதங்கம்

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (22:41 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் உடல்தானம் செய்தார் என்ற செய்தி வெளிவந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அவரை தொடர்ந்து பிரபல பத்திரிகையாளர் கயல் தேவராஜ் அவர்களும் தனது பிறந்த நாள் அன்று உடல்தானம் செய்தார்.





இதுகுறித்து கேள்விப்பட்ட கமல், அவரை குடும்பத்துடன் நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது தமிழகத்தில் உடல்தானம் செய்த நபர்களில் தான் 1560வது நபர் என்று வரிசை எண்ணை கூறினாராம். இதைகேட்டு கமல் ஆதங்கம் அடைந்தாராம். 7 கோடி பேர் வாழும் தமிழகத்தில் உடல்தானம் செய்தவர்களின் எண்ணிக்கை இவ்வளவுதானா? என்பதுதான் கமலின் ஆதங்கம்

அஜித், விஜய் பிறந்த நாளில் அவர்களுடைய ரசிகர்கள் போஸ்டர் அடிப்பதையும் பிளக்ஸ் போர்டு வைப்பதையும் நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக உருப்படியாக உடல்தானம், ரத்த தானம் கண்தானம் செய்தால் இந்த 1500 என்பது ஒரே வருடத்தில் கோடிக்கணக்கில் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. செய்வீர்களா அஜித், விஜய் ரசிகர்களே
அடுத்த கட்டுரையில்