ஒட்டு மீசை, ஓவர் ஆக்டிங் கமல் – என்ன கொடும சார் இது ?

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2018 (11:34 IST)
கமல் நடிப்பில் வெளியாகியுள்ள விஜய் டி.வி ஸ்டார்பேக் வேல்யூ விளம்பரம் சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளது.

கமல் அரசியலில் பிசியாக உள்ளதால் இந்தியன் 2 வோடு நடிப்புக்கு முழுக்கு போடுவதாக அறிவித்துள்ளார். ஆனால் கட்சி நடத்துவதற்கும் தனது சொந்த செலவுகளுக்கும் தேவைப்படும் பணத்தை விளம்பரங்கள் மூலமாக சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே போத்திஸ் ஜவுளிக் கடையின் விளம்பரங்களில் கமல் நடித்திருந்தார். அந்த விளம்பரங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதையடுத்து தற்போது ஸ்டார் நெட்வொர்க்கின் டிடிஹெச் ரீசார்ஜ் பேக்கின் விளம்பரத்தில் நடித்துள்ளார். ஸ்டார் நெட்வொர்க் 25 ரூபாய்க்கு அனைத்து ஸ்டார் சேனல்களை கொடுக்கும் குறுகிய கால சலுகைகளை வழங்கவுள்ளது. இந்தாண்டு டிசம்பர் 29 வரை இந்த சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. இதனை விளம்பரப் படுத்தும் வீடியோவினை இப்போது வெளியிட்டுளனர்.

நேற்று ஸ்டார் விஜய்யின் பேஸ்புக் பக்கத்தில் இந்த விளம்பரத்தை வெளியிட்டது. இந்த வீடியோவின் கீழ் ரசிகர்கள் விளம்பரம் குறித்த விமர்சனங்களையும் கேலிகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

விளம்பரத்தில் ஓட்டு மீசையோடு தோன்றும் கமல் தனது நடிப்பாற்றலையும் கழட்டி வைத்துவிட்டு மிகவும் செயற்கையான ஓவர் ஆக்டிக் செய்துள்ளதாகவும் ரசிகர்கள் வருத்தத்தோடு கூறிவருகின்றனர். கமலின் இந்த விளம்பரம் குறித்த நக்கல் நையாண்டிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்