கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

Webdunia
திங்கள், 9 மே 2022 (11:08 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது 
 
இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படம் சிவகார்த்திகேயனின் 21 படமாகவும் ராஜ்கமல் பிலிம்ஸ்ஸின் 51 வது படமாக உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்