'தளபதி 66' படத்தின் ரிலீஸ் பற்றி வெளியான அறிவிப்பு!

திங்கள், 9 மே 2022 (08:37 IST)
தளபதி 66 படத்தின் ரிலீஸ் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது இன்று ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது. அந்த படப்பிடிப்புக்காக விஜய் ஹைதராபாத் செல்ல விமான நிலையம் வந்த காட்சிகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் இப்போது படத்தில் நடிக்கும் முக்கியக் கதாபாத்திரங்களுக்கான நடிகர் நடிகைகள் பற்றி onboard தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. மேலும் ‘தளபதி 66’ படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் எனவும் அந்த போஸ்டர்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்