கல்கி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

vinoth
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (14:25 IST)
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கல்கி திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்க நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் வசூல் செய்தது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இந்த படம் நல்ல வசூலை தொடக்கம் முதலே பெற்று வந்தது. இந்நிலையில் இப்போது வரை இந்த திரைப்படம் 1100 கோடி ரூபாய் அளவுக்கு திரையரங்குகள் மூலமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

இதையடுத்து கல்கி திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் ப்ரைம் தளத்தில் தென்னிந்திய மொழிகளிலும், நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தியில் ரிலீஸாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்