ரஜினியோடு இணைந்து ‘கூலி’ படத்தில் நடனம் ஆடுகிறாரா டி ஆர்?

vinoth

வெள்ளி, 27 ஜூன் 2025 (11:09 IST)
தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார்.

தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும்  "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இதன் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலாக ‘சிக்குடு’ சமீபத்தில் ரிலீஸாகி வைரல் ஆகி வருகிறது. இந்த பாடலில் டி ஆர் குரல் கொடுத்திருப்பதோடு ப்ரோமோ வீடியோவில் நடனமும் ஆடியிருந்தார். இதைவைத்து ரசிகர்கள் இப்போதே கூலி படத்தில் இந்த பாடலில் ரஜினியோடு டி ஆரும் இணைந்து நடனமாட வாய்ப்புள்ளதாக கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு என்று சொல்லப்படுகிறது. இந்த பாடலை எப்போதோ லோகேஷ் கனகராஜ் படமாக்கி முடித்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்