பா இரஞ்சித் படத்தின் நாயகன் மாற்றமா?

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (10:21 IST)
பா ரஞ்சித் அடுத்து இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க காளிதாஸ் ஜெயராம் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். இவர், தற்போது சர்பாட்டா பரம்பரை என்ற படத்தை நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கியுள்ளார். இந்தப்படம் ஜூலை 22ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் பா. ரஞ்சித்தின் அடுத்தப்பட டைட்டில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தற்போது அட்டகத்தி ஸ்டைலில் ஒரு காதல் கதை இயக்கப்போகிறாராம். இந்த படத்திற்கு "  “நட்சத்திரம் நகருகிறது”  என டைட்டில் வைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக முதலில் அசோக் செல்வன் நடிப்பதாக இருந்தது.

ஆனால் இப்போது காளிதாஸ் ஜெயராம் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அசோக் செல்வன் நீக்கப்பட்டாரா அல்லது இருவருமே கதாநாயகர்களாக நடிக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்