இந்தியாவில் கொரோனா 2 வது அலை கடுமையான உயிர் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், 3 ஆம் அலை செப்டம்பர் அல்லது அக்டோபரில் ஏற்பட வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த 3 ஆம் அலை குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா 3 ஆம் அலை ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், 12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.