திருமனத்துக்குப் பின் சினிமா வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை- காஜல் அகர்வால்

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (15:48 IST)
நடிகை காஜல் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர் அடுத்து புதிதாக திரைப்படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்று சொல்லப்பட்டது.

தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல். சமீபத்தில் அவருக்கு திருமணம் முடிந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் அதிகமாக இல்லாததால் கணவருடன் ஜாலியாக சுற்றிவந்த அவர் சினிமாவை விட்டு விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இப்போது அவர் அளித்த ஒரு நேர்காணலில் திருமணம் சினிமா வாழ்க்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் அவர் ‘திருமணத்துக்குப் பின்னர் நடிகைகள் சினிமாவில் இருந்து விடைபெறும் காலம் மாறிவிட்டது. மக்களும் இதை புரிந்துகொள்வதில் மகிழ்ச்சி. என்ன நடந்தாலும் நாம் வேலையை தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்