எங்க அப்பா 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றியவர்: தேசிய விருது பெற்ற நல்லாண்டியின் மகள்..!

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (08:29 IST)
69ஆவது தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் தமிழில் சிறந்த படம் கடைசி விவசாயி என்றும் இந்த படத்தில் நடித்த நல்லாண்டிக்கு விருதும் கிடைத்தது என்பதை பார்த்தோம்,
 
இந்த நிலையில் தேசிய விருது பெற்ற நல்லாண்டியின் மகள் ஊடகம் ஒன்று உருக்கமாக பேட்டியளித்துள்ளார். அதில் எங்க அப்பா 100 நாள் வேலைக்கு சென்றவர், அப்போதுதான் மணிகண்டன் இயக்குனர் எங்க அப்பாவிடம் வந்து கடைசி விவசாயி என்ற திரைப்படத்தில் நடிக்க வேண்டும், படம் முடியும் வரை உங்களை நாங்கள் நன்றாக பார்த்துக் கொள்கிறோம் என்று கூறினார். 
 
இதனை அடுத்து தான் எங்க அப்பா அந்த படத்தில் நடித்தார். இப்போது தேசிய விருது கிடைத்த மிகவும் சந்தோஷம். எங்க அப்பா ஒரு உண்மையான விவசாயி, தூய உள்ளம் கொண்டவர், அவர் கடைசி வரை நன்றாக இருக்க வேண்டும், அவர் எங்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக உள்ளார். 
 
நாங்கள் அனைவரும் அவரை நன்றாக பார்த்துக் கொள்வோம். எங்களுக்கு அவர் தெய்வம் மாதிரி என்று உருக்கமாக பேட்டி அளித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்