சென்னை கமலா தியேட்டரில் ‘காலா’விற்கு பதில் ஜுராஸிக் பார்க் - ஏன் தெரியுமா?

Webdunia
புதன், 6 ஜூன் 2018 (14:38 IST)
சென்னை கமலா தியேட்டரில் காலா படத்தை திரையிட அந்த தியேட்டர் நிறுவனம் மறுத்து, அப்படத்திற்கு பதில் ஜுராஸிக் பார்க் படத்தை திரையிட இருக்கிறது.

 
நடிகர் ரஜினிகாந்த் நடித்து, இயக்குனர் ரஞ்சித் இயக்கியுள்ள காலா திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தில் ரஜினி, ஈஸ்வரி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 
 
இப்படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஆனால், சென்னையில் பல தியேட்டர்களில் வார இறுதி நாட்களுக்கே டிக்கெட் கிடைப்பதாகவும், ஆன்லைன் முன்பதிவு மந்தமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில், சென்னை வடபழனி பகுதியில் உள்ள கமலா தியேட்டரில் காலா திரையிடப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அரசு விதித்த கட்டுப்பாட்டை மீறி காலா படத்திற்கான டிக்கெட் கட்டணம் வசூலிக்க வேண்டும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க முடியாது என தியேட்டர் தரப்பில் கூறப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. காலா திரைப்படத்திற்கு பதில் நாளை ஜுராஸுக் பார்க் திரையிடப்படும் என தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
காவிரி விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே கர்நாடகாவில் காலா படத்தை திரையிடுவதற்கு கன்னட திரை அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்