கர்நாடகாவில் காலா படல் ரிலீஸ்? - வெளியீடு உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்

புதன், 6 ஜூன் 2018 (14:07 IST)
கர்நாடகாவில் காலா படம் வெளியாவதில் சிக்கல் நீடித்த நிலையில் கனக்புரா என்கிற வினியோகஸ்தர் காலா படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
கர்நாடகாவில் 'காலா' படத்தை ரிலீஸ் செய்ய திரையரங்குகளுக்கு உத்தரவிட முடியாது என்று கூறிவிட்ட நீதிமன்றம், இருப்பினும் காலா படத்தை வெளியிடும் கர்நாடக தியேட்டர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நேற்று மாலை உத்தரவிட்டது. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு தெரிவித்தால் 'காலா' படத்தை வெளியிட ஒத்துழைக்கின்றோம் என கன்னட திரைப்பட வர்த்தகசபை அறிவித்துள்ளது.  
 
அப்படி வெளியிட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளை தயாரிப்பாளரே எதிர்கொள்ள வேண்டும்” எனவும் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். எனவே, காலா படம் கர்நாடகாவில் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
 
இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் “கர்நாடகாவில் வீம்புக்காக இப்படத்தை நாங்கள் ரிலீஸ் செய்யவில்லை. இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. எனவே, படத்தை வெளியிட அனைவரும் உதவ வேண்டும். நான் எந்த தவறான கருத்தையும் கூறவில்லை. படம் பார்க்க வருபவர்களுக்கு தொந்தரவு செய்ய வேண்டாம். படத்தை ரிலீஸ் செய்ய உதவி செய்யுங்கள்” என அவர் பேசியிருந்தார்.
 
இந்நிலையில், அவரின் வேண்டுகோளை ஏற்று கர்நாடகாவில் காலா படத்தை வெளியிடும் உரிமையை கனக்புரா என்கிற விநியோகஸ்தார் வாங்கியுள்ளதாக தற்போதுசெய்தி வெளிவந்துள்ளது. இவரின் ‘சி’ நிறுவனம் சார்பில் கர்நாடகா முழுவதும் 130 திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியிடப்படும் என செய்திகள் வெளிவந்துள்ளது.

அதேசமயம் இதனை எதிர்த்து கன்னட அமைப்புகள் நாளை காலா படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்